விருதுநகர் அருகே சூலக்கரையில் செல்லத்துரை என்பவரது வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்கை மற்றும் 10 ஆயிரம் ரூபாய், லேப்டாப் கொள்ளை.

விருதுநகர் அருகே சூலக்கரையை சேர்ந்த செல்லத்துரை என்பவர் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் இன்று காலை கோவில்பட்டியில் உள்ள உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த செல்லத்துறை வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகை மற்றும் லேப்டாப், 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்