விருதுநகர் அருகே பட்டம்புதூர் ஊராட்சி கண்மாய் கரை உடைந்து விவசாய நிலங்களுக்கு புகுந்ததில் 100ஏக்கர் பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம்...ஊராட்சி நிர்வாகம் கண்மாயை முறையாக சீரமைக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த மிதமழை காரணமாக பட்டம்புதூர் ஊராட்சி கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் கண்மாய் மதகிற்கு அருகில் பலவீனமான நிலையில் இருந்த கரை உடைந்து கண்மாய் நீர் முழுவதும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, சோளம், கம்பு, எள், உள்ளிட்ட பயிர்கள் சேதமானது. கடந்த பல ஆண்டுகளாக கண்மாய் கரை பலவீனமாக உள்ளதால் கரையை பலப்படுத்த கோரி பல முறை ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத்தே கரை பழுதாகி சேமிப்பு நீர் வெளியார காரணம் என குற்றம் சாட்டும் விவசாயிகள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுபதுடன் கண்மாய் கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest News