விருதுநகர் அடுத்த அல்லம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்...

விருதுநகர் அடுத்த அல்லம்பட்டியில் மாரிக்கனி என்பவரது மகன் வைரவேல் (வயது 9) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தனியார் பள்ளிக்கு சொந்தமாக புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். வெகு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் சென்று பார்த்த போது சிறுவன் மூழ்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தெரிவித்தனர். விளையாடிக் கொண்டிந்த போது தவறி விழுந்து உயிரிழப்பு.
பாதுகாப்பற்ற நிலையில் தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டிருந்ததே சிறுவன் உயிரிழப்பிற்கு காரணம் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Latest News